வியாழன், 17 ஜனவரி, 2013

பசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி - சந்தேக நிழலில் ஜான் பாண்டியன்!

கடந்த வருடம் 10.01.2012ஆம் தேதியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திண்டுக்கல் இருந்து தூத்துக்குடிக்கு எடுத்து வரப்பட்டு மேல அலங்காரதட்டு பகுதியில் அவரது மனைவி ஜெஸிந்தா பாண்டியன் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டது.




பசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி - சந்தேக நிழலில் ஜான் பாண்டியன்!




10.01.2013 இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

தேவேந்திரர் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆத்தூர் ராஜேந்திரன், பொது செயலாளர் ராஜா, பொருளாளர் பொன்ராஜ், அமைப்பு செயலாளர் சேலம் தேவேந்திரன் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வன்னி அரசு, புரட்சி பாரதம் அமைப்பை சார்ந்தவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. முருவேல்ராஜன் தேவேந்திரர் உலகம் ஆசிரியர் ஜே.கே.பழனி தேவேந்திரன் மற்றும் தென் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காலை 6 மணியிலிருந்து பசுபதி பாண்டியன் சமாதிக்கு மாலை அணிவித்து வணங்கி சென்றார்கள்.


இதையொட்டி மூன்று மாவட்டங்களை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தான் வர வேண்டும் என சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேண பலவித கட்டுப்பாடுகள் காவல்துறையால் விதிக்கப்பட்டிருந்தது.


சமாதிக்கு மாலை அணிவித்து பின்பு தேவேந்திரர் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆத்தூர் ராஜேந்திரன் நமது செய்தியாளரிடம் பேசியதாவது:


* தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கை சி.பி.ஐ. புலன் விசாரணை செய்ய வேண்டும்.


* முதன்மை குற்றவாளி 1 வருடம் சென்ற பின்பும் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. உண்மை குற்றிவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.

* நெல்லை - தூத்துக்குடி - திண்டுக்கல் மாவட்டங்களில் சமீப காலமாக காவல்துறை தேவேந்திரர்கள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்றும், மேலும் முக்கிய தீர்மானங்களை தலைவர் சமாதி முன்பு நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்று தெரிவித்தார்.

சென்ற தடவை இங்கு வந்த ஜான் பாண்டியன் ஏன் வரவில்லை என நமது நிருபர் கேட்டதற்கு...?

நாங்கள் தான் தலைவரின் சமாதிக்கு ஜான் பாண்டியனை வரவிட மாட்டோம் என தூத்துக்குடி காவல்துறை எஸ்.பி.க்கு தெரிவித்துவிட்டோம்.

என்ன காரணம் என்று நமது நிருபர் கேட்டதற்கு,

தலைவர் பசுபதி பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் முத்துபாண்டி முன்பு ஜான்பாண்டியன் கட்சியில் பொறுப்பில் இருந்தவர். இப்பவும் ரகசிய தொடர்பில் இருக்கிறாரோ? என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஏனெனில் திண்டுக்கல் பழனி முருகன் கோவில் தைப்பூசம் முத்துபாண்டி மனைவி நடத்திய நிகழ்ச்சியால் எங்கள் சந்தேகம் மேலும் வலுக்கிறது.மேலும் முக்கியமானவரை சந்தித்து இருக்கலாம் என்று அவர் மீது சந்தேகம் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எழுந்து இருக்கிறது என ஜான்பாண்டியன் மீது திடீர் அதிரடியை கிளப்பியுள்ளார் தேவேந்திரர் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆத்துர் ராஜேந்திரன்.

சென்ற வருடம் பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் தூத்துக்குடியில் கடைகள் மீது கல்வீச்சு, கலவரம் என்று அசம்பாவிதம் நடைபெற்றதால் காவல்துறை முன் எச்சரிக்கையோடு முதலாம் ஆண்டு நினைவு சுவரொட்டி கிழிப்பு, மதுரை-திண்டுக்கல் போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக