வியாழன், 7 ஜூன், 2012

கோ வையில் இலங்கை அமைச்சருக்கு... எதிராகஆர்ப்பாட்டம் ..:?

கடந்த ஜனவரியில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் உறவினர் திருக்குமரன் நடேசன் ஆலய வழிபாட்டிற்காக இராமேஸ்வரம் சென்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதையும், தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், தனது அரசிற்குத் தெரிவிக்காமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வருவதைத் தவிர்க்கவேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கே கடிதம் எழுதியிருந்ததையும்... 
 

இலங்கை அமைச்சருக்கு எதிராக ...



அமைச்சர் ரெஜினால்ட் கூரே
அமைச்சர் ரெஜினால்ட் கூரே
கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்ட் கூரே, மதிமுக உட்பட சில கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் எதிர்ப்பின் விளைவாய் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் நாடு திரும்பியிருக்கிறார்.
வியாழனன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபெறவென புதனன்று கோவை சென்றிருக்கிறார் அமைச்சர்.
கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி குறித்து அறிந்த அமைப்புக்கள், அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்க, காவல்துறையின் ஆலோசனையின்பேரில் இன்று காலையே சென்னை வழியாக கொழும்பு திரும்பினார் கூரே.
அவர் சென்றுவிட்டது தெரியாத ஆர்வலர்கள் அவர் தங்கியிருந்த ஓட்டலின் முன்பும், மத்திய ஆராயச்சி நிறுவனம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரியில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் உறவினர் திருக்குமரன் நடேசன் ஆலய வழிபாட்டிற்காக இராமேஸ்வரம் சென்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதையும், தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், தனது அரசிற்குத் தெரிவிக்காமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வருவதைத் தவிர்க்கவேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கே கடிதம் எழுதியிருந்ததையும் நாம் இங்கே நினைவுகூறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக