திங்கள், 15 அக்டோபர், 2012

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் என். பெரியசாமிபாளையங்கோட்டைசிறை

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் என். பெரியசாமிபாளையங்கோட்டைசிறை

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் என். பெரியசாமியின்முன்ஜாமின் மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்ததையடுத்து, அவர் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் என். பெரியசாமி. இவர் தூத்துக்குடி கார்டுவெல் காலனியைச் சேர்ந்தமுகமது பாத்திமா என்பவருக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்பிலான 19 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை, போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக தெர்மல் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரியசாமி, அவரது மகன் ஜெகன் உட்பட 13 பேர் தலைமறைவாகினர். இந்நிலையில், இந்த 13 பேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மதியம் 3 மணியளவில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில் பெரியசாமி சரணடைந்தார்.
இதையடுத்து பெரியசாமி, தூத்துக்குடி ‌ஜே.எம்.-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை 15 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி மாயகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பாளையங்கோட்டைசிறைஅடைக்கப்பட்டார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக