திங்கள், 22 அக்டோபர், 2012

ar Halved C

ar Halved C

தூத்துக் குடி மாவட்ட வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சி


வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சிகள் கோலாகலம் பார்வையாளர்களை கவர்ந்த வாகன பேரணி கலைநிகழ்ச்சிகளும் அசத்தல்








தூத்துக்குடி, : தூத்துக் குடி மாவட்ட வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகன பேரணி, கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. தூத்துக்குடி மாவட்ட  வெள்ளி விழா கொண்டாட்டம் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மாணவ மாணவிகளின் மாரத்தான் ஒட் டம் நடந்தது. தொடர்ந்து  முன்னிட்டு  மனித குல மகிழ்ச்சிக்கு துணை நிற்பது, அன்பா அறிவா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக இருந் தார். தொடர்ந்து அரிய பொருட்களின் கண்காட்சி நடந்தது.

திங்கள், 15 அக்டோபர், 2012

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் என். பெரியசாமிபாளையங்கோட்டைசிறை

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் என். பெரியசாமிபாளையங்கோட்டைசிறை

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் என். பெரியசாமியின்முன்ஜாமின் மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்ததையடுத்து, அவர் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் என். பெரியசாமி. இவர் தூத்துக்குடி கார்டுவெல் காலனியைச் சேர்ந்தமுகமது பாத்திமா என்பவருக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்பிலான 19 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை, போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக தெர்மல் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரியசாமி, அவரது மகன் ஜெகன் உட்பட 13 பேர் தலைமறைவாகினர். இந்நிலையில், இந்த 13 பேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மதியம் 3 மணியளவில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில் பெரியசாமி சரணடைந்தார்.
இதையடுத்து பெரியசாமி, தூத்துக்குடி ‌ஜே.எம்.-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை 15 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி மாயகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பாளையங்கோட்டைசிறைஅடைக்கப்பட்டார்.




ஞாயிறு, 14 அக்டோபர், 2012



நில அபகரிப்பு புகார்: தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி வீட்டில் போலீசார் சோதனை

.

 தி.மு.க

தொண்டர்கள் பரபரப்பு

தூத்துக்குடிதி.மு.க. மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி மற்றும் அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து கொண்டதாக முகைதீன் பாத்திமா தெர்மல் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
        



இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பெரியசாமி உள்பட 13 பேர் மீதும் போலி ஆவணம் தயாரித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே பெரியசாமி தரப்பில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பெரியசாமி உள்ளிட்ட 13 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
இதுபற்றி தகவல்  தி.மு.க. தொண்டர்கள் பரபரப்பு

போலீசார் சோதனை








நில அபகரிப்பு புகார்: தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி வீட்டில் போலீசார் சோதனை

--

Short Film - House Wife