வியாழன், 24 மே, 2012

முரசொலி மீது ஜெ வழக்கு


ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செய்தியை வெளியிட்ட முரசொலி பத்திரிகை மீது முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
20.5.2012 வெளியாகிய முரசொலி நாளிதழில் ஜெயலலிதாவின் மாபியா மணல் தாதாக்கள் அராஜகம் என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகவும், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஜெகன், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் மீது அவதூறு கூறும் நோக்கில் செய்தி வெளியிட்டுள்ள முரசொலி ஆசிரியர் செல்வம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை ஜூன் 6 ஆம் திகதிக்கு நடைபெறும் என நீதிபதி சுமதி உத்தரவிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக