திங்கள், 3 செப்டம்பர், 2012

ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு - போராட்டம்


ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு -  போராட்டம்



 மத்திய பி‌ரதேச மாநிலத்திற்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே வருகை தருவதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தி்த்த கருணாநிதி கூறியதாவது, மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள புத்த மத கல்வி‌ மைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கூறினார்.

ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, போராட்டம் நடத்தும் எண்ணம் இல்லை என்று கருணாநிதி பதிலளித்தார்.

வைகோ கறுப்புக்கொடி :
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய பிரதேச மாநிலத்தின் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கே நேரடியாகச் சென்று ராஜபக்ஷேவிற்கு கறுப்புக்கொடி காட்ட இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைகோ தலைமையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுஷ்மா தொகுதி :
இலங்கை அதிபர் ராஜபக்ஷே பங்கேற்க உள்ள நிகழ்ச்சி மத்தியபிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ளது. இப்பகுதி, பாரதிய ஜனதா மூத்த த‌லைவரும் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜின் தொகுதியின் கீழ் வருகிறது. ராஜபக்ஷேயின் வருகை தகவலை, சனி்க்கிழமை, சுவராஜ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக