புதன், 5 செப்டம்பர், 2012

சிவகாசி பட்டாசு விபத்து

சிவகாசி பட்டாசு விபத்து

சிவகாசி பட்டாசு விபத்துசிவகாசி மாவட்டத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.இந்த தீ விபத்தில் 40 அறைகள் தரைமட்டமாயின. விபத்தில் பலியானவர்களில் பலர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்கள், சிவகாசி, மதுரை உள்ளிட்ட மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுபோன்ற பட்டாசு ஆலை தீ விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் உள்ளன.ஆகஸ்ட் 13, 2012விருதுநகர் மாவட்டம் மாரநேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் ராமாலஷ்மி (45) என்ற பெண்மணி உயிரிழந்தார். இந்த விபத்தில் அவர் பணி செய்து வந்த குடிசையும் முற்றிலும் சேதமானது.ஆகஸ்ட் 10, 2012வேம்பக்கோட்டை அருகே துலுக்கக்குறிச்சி என்ற பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளர் படுகாயம் அடைந்தார். அவர் பணியாற்றிய அறை முற்றிலும் தரைமட்டமானது.மே 10, 2012விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.மார்ச் 27, 2012சாத்தூர் அருகே சங்கரபாண்டியபுரம பகுதியில் இருந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ரசாயனத்தைக் கலக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தனர்.மார்ச் 7, 2012சிவகாசியில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார், ஒருவர் காயமடைந்தார்.பிப்ரவரி 28, 2012விருதுநகரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயமடைந்தனர்.பிப்ரவரி 3, 2012சேவல்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.2011ம் ஆண்டில், டிசம்பர் மாதம் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில்  4 பேரும், அக்டோபர் மாதம் சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில்  ஒருவரும், ஆகஸ்ட் மாதம் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 6 பெண்களும், ஜுன் மாதம் நடந்த விபத்தில் ஒரு பெண்ணும், ஜனவரி மாதம் விருதுநகரில் நடந்த விபத்தில் 8 தொழிலாளிகளும் என 20 தொழிலாளர்கள் பலியாயினர்.2010ஆம் ஆண்டு சிவசாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 22 தீ விபத்துக்களில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர்.2009ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 23 விபத்துக்களில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டனர்.இதில் பெரும்பாலான விபத்துக்கள், அங்கீகாரம் இல்லாமல், வீடுகளில் பட்டாசு தயாரித்த போது நேரிட்ட விபத்துக்களாக இருக்கின்றன.சிவசாசியில், விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, மீனாக்ஷிபுரம், ராமலிங்கபுரம், சல்வார்பட்டி, வேம்பக்கோட்டை ஆகிய கிராமங்களில்     அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பல பட்டாசு ஆலைகள் உள்ளன.அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் 1.3 லட்சம் மக்கள் பணியாற்றுகின்றனர் என்றால், அங்கீகாரம் இல்லாத ஆலைகளிலும், வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பதிலும் சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக