புதன், 21 நவம்பர், 2012

சூப்பர் ஸ்டார் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குபோடுவேன்? ரஜினி ரசிகர் அதிரடி....

சூப்பர் ஸ்டார் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குபோடுவேன்? ரஜினி ரசிகர் அதிரடி....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றால் அவர் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன் அதுவும் தலைவர் ரஜினிகாந்த் (டிசம்பர் 12) பிறந்தநாளுக்குள் அவர் இது பற்றி வாய் திறக்க வேண்டும் என்று தூத்துக்குடி அருணாசலம் ரஜினிகாந்த் ஆன்மீக பேரவை மன்ற தலைவர் பாயும் புலி S.P.S. ரஜினி குமார் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் 20 பக்க ஆவேச அறிக்கையை பத்திரிக்கையாளருக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்.

இந்த திடீர் பரபரப்பு பற்றி  ரஜினிகாந்த் ரசிகர் பாயும் புலி S.P.S. ரஜினி குமார்"அவர் பேசியதாவது:-

வணக்கம், என் பெயர் செல்வகுமார். நான் தூத்துக்குடியில் அருணாசலம் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் என்று சொல்லி ரஜினிக்காக கடந்த 18-லிருந்து 20 வருடங்களாக ரஜினிக்காக பொதுமக்களுக்கு நல்லது செய்து கொண்டு இருக்கிறேன்.

நான் வந்து தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும். அப்படின்னு குறிக்கோள் என் வாழ்க்கையும் அது தான்.

என்னோட முதல் கட்ட முயற்சியாய் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. நிலையும் அன்று இருந்த தமிழ்நாட்டு சூழ்நிலையும் எதிர்கட்சிகள் செல்வாக்கு இல்லாததையும் காரணம் காட்டி இப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும். பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்று எடுத்துரைத்து... தூத்துக்குடியில் பொதுமக்கள் மிகுந்த நடமாட்டம் உள்ள பகுதியான சிவன்கோவில் அருகே மெகா சைஸ் டிஜிட்டல் போர்டு ஒரு வராமாக வைத்திருந்தேன்.

அப்போது நியூஸ் விங் வார இதழில் முதற்கொண்டு எனது பேட்டி செய்தி வெளிவந்தது. தீக்குளிக்கும் ரஜினி ரசிகன் என்ற போதிலும் ரஜினி கிட்ட இருந்தோ, மன்றத்திடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை நான் காவல்துறை பிரச்சினையை சந்தித்தேன்.

ஒரு தமிழன் உயிர் பற்றியும், அதன் மதிப்பு பற்றியும் சரியா தெரியல. எனது அடுத்த கட்ட முயற்சியா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர இருக்கேன்.

தலைவர் ரஜினி ஒன்று கட்சி ஆரம்பிக்கனும்... இல்லன்னா? அதற்குண்டான விளக்கத்தை தரனும். ஏன்? கட்சி ஆரம்பிக்கவில்லை என தெள்ள தெளிவாக ரசிகர்கள்கிட்டயும் பொதுமக்களிடத்திலும் சொல்லனும்.

பிரஸ் - ஐ கூப்பிட்டு இது தான் காரணம் அரசியலில் என்னை எதிர்பார்க்காதீங்க இதை பிறந்த நாளுக்கு முன்பே சொல்லுங்கள். ஏன்னா? என்னோட உயிரை பற்றி ரஜினி கவலைபடலை நான் தீக்குளிப்பேன் அப்படி நேர்ந்து அரசியலுக்கு வரலைன்னா... அதற்கு சரியா பதில் கிடைக்கனும். என்னோட இந்த கருத்தை இணையத்தளத்தில் பதிவு செய்கிறேன் என்றார்.

மேலும் தூத்துக்குடி ரசிகர் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆசைப்படுவது ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது தான். அதற்காக ரஜினி வந்து கட்சி தொடங்குவது பற்றி தெளிவான அறிக்கையை பிறந்த நாளில் வெளியிட வேண்டும் என நினைக்கிறேன்.

தலைவர் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்குள் வரவேண்டும். தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் அவர் மேல ரசிகர்கள் சார்பாக தொடர இருக்கிறேன் என்றார் S.P.S. ரஜினி குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக